2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தொடரைத் தக்க வைக்குமா இந்தியா?

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 22 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது மன்செஸ்டரில் புதன்கிழமை (23) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்றுள்ள நிலையில் தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

கடந்த போட்டியில் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி காயத்தால் தொடரிலிருந்து விலகிய நிலையில் அவரை சாய் சுதர்ஷன் அணியில் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. றிஷப் பண்ட் முழுமையாகக் குணமடையா விட்டால் சுதர்ஷனுக்கு பதில் துருவ் ஜுரேல் அணியில் இடம்பெறலாம்.

அடுத்து ஆகாஷ் டீப் உபாதைக்குள்ளாகிய நிலையில் அவரை அன்ஷுல் கம்போஜ் அணியில் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இங்கிலாந்து அணியில் ஷொய்ப் பஷிரை லியம் டோஸன் பிரதியிட்ட நிலையில் அவ்வணியின் பின்வரிசை மேலும் பலமாகிறது. குஸ் அட்கின்ஸனை உடனே அணியில் கொண்டு வரா விட்டாலும் கிறிஸ் வோக்ஸ் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டியவராகக் காணப்படுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .