Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 31 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது அன்டிகுவாவில் இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.
ஜொஸ் பட்லர் இல்லாத நிலையில் இங்கிலாந்தின் அணித்தலைவராக கடமையாற்றப் போகும் லியம் லிவிங்ஸ்டோனுக்கு தனது மீள்வருகைக்கு அடுத்த இந்த தொடரில் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஏனெனில் வில் ஜக்ஸ், ஜேக்கப் பெதெல், டான் மூஸ்லி என இளம் சகலதுறைவீரர்கள் களத்தில் போட்டிக்காக காணப்படுகின்றனர்.
தவிர சஹிப் மஹ்மூட்டின் மீள்வருகையில் தன்னை நிரூபிக்க எதிர்பார்ப்பார் என்பதோடு மிஷெல் பெப்பர், ஜோர்டான் கொக்ஸ் ஜாஃபர் சோஹன், ஜோன் டேர்னர் ஆகியோருக்கும் ஜேமி ஒவெர்ட்ட, சாம் கர்ரனுக்கு தம்மை நிரூபித்துக் கொள்ள வாய்ப்பாக இத்தொடர் அமைகின்றது.
மறுப்பக்கமாக இலங்கைக்கெதிரான இறுதிப் போட்டியில் சதம் பெற்ற எவின் லூயிஸ் தொடர்ந்து பெறுபேறுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அணியில் நீடிக்க முடியும் என்பதுடன் மீள்வருகை புரிந்துள்ள ஷிம்ரோன் ஹெட்மயருக்கும் தன்னை நிரூபிக்க இத்தொடர் வாய்ப்பாகக் காணப்படுகிறது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025