Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணியின் தலைவர் விராத் கோலி காணப்படுகின்றார்.
நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் இந்தியா தோற்று தொடரை இழந்தபோதும் குறித்த போட்டியில் 104 ஓட்டங்களைப் பெற்ற கோலி டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் தொடருவதுடன் தனது வாழ்நாளின் அதிகூடியதான 937 தரப்படுத்தல் புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, குறித்த டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் சதம் பெற்ற செட்டேஸ்வர் புஜாரா, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலேயே தொடருகின்றார்.
அந்தவகையில், முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, குறித்த டெஸ்டில் இங்கிலாந்தின் மீள்வருகையை ஆரம்பித்ததுடன் முக்கியமானவராய் அமைந்த சாம் கர்ரன் 124 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 29 இடங்கள் முன்னேறி 43ஆம் இடத்தை அடைந்துள்ளார். இதுதவிர, இங்கிலாந்தின் இரண்டாவது இனிங்ஸில் 69 ஓட்டங்களைப் பெற்ற ஜொஸ் பட்லர் 15 இடங்கள் முன்னேறி டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 32ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த போட்டியில் அவ்வளவாகப் பிரகாசித்திருக்காத இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின் ஓர் இடத்தை இழந்து டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளார். எட்டாமிடத்திலிருந்த ரங்கன ஹேரத் ஏழாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் வேறு எந்தவிதமாற்றமும் ஏற்படவில்லை. முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, குறித்த போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி மூன்று இடங்கள் 19ஆம் இடத்தைப் பிடித்ததுடன், நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இஷாந்த் ஷர்மா ஓர் இடம் முன்னேறி 25ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நாயகனாகத் தெரிவான மொயின் அலி மூன்று இடங்கள் முன்னேறி டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 33ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago