2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தொம்ஸன், லைல்ஸைத் தாண்டி வென்ற செவில்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் டோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற உலகத் தடகள சம்பியன்ஷிப்பில் சக ஜமைக்கா ஓட்ட வீரரான கிஷேன் தொம்ஸன், ஐக்கிய அமெரிக்காவின் நோவா லைல்ஸைத் தாண்டி ஜமைக்காவின் ஒபிலிக் செவில் ஆகியோர் வென்று புதிய 100 மீற்றர் உலக சம்பியனாகியுள்ளார்.

போட்டித் தூரத்தை 9.77 செக்கன்களில் கடந்து செவில் முதலிடம் பெற்ற நிலையில், தொம்ஸன் 9.82 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து இரண்டாமிடத்தைப் பெற்ற நிலையில், 9.89 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து லைல்ஸ் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

ஒலிம்பிக் 200 மீற்றர் சம்பியனான பொட்ஸ்வானாவின் லெட்சிலே டெபொகோ முன்னரே ஒட்டத்தை ஆரம்பித்தமைக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X