2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

நியூசிலாந்துக்கெதிராக இலங்கை பலமான நிலையில்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கையணிக்கும் நியூசிலாந்துக்குமிடையிலான நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் ஆடி வரும் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களையே பெற்று இலங்கையணியின் முதல் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 61 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.

தற்போது களத்தில் தவ் பிரேஸ்வெல் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். முன்னதாக மார்ட்டின் கப்தில் 50 ஓட்டங்களையும் மிட்செல் சந்தர் 38 ஓட்டங்களையும் பிஜெ வோட்லிங் 28 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக துஷ்மந்த சமீர தனது முதலாவது 5 விக்கெட் பெறுதியை பெற்றதுடன் ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப், சுரங்க லக்மால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக இலங்கையணி தனது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் 77 ஓட்டங்களையும், மிலிந்த சிரிவர்த்தன 62 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 47 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட், டவ் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நீல் வாக்னர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .