Shanmugan Murugavel / 2016 ஜனவரி 14 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்ற நிலையில், தொடரின் இரண்டாவது போட்டி, நாளை காலை 8.50க்கு பிரிஸ்பேனில் ஆரம்பிக்கவுள்ளது.
தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைச் சமப்படுத்தும் முனைப்புடன் களமிறங்குகின்றது. பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்துகள் உயர்ந்து எழும்பி வருமென்றபோதும் துடுப்பாட்டவீரர்களுக்கு சாதகமாகவே விளங்கப்போகின்றது.
இந்திய அணியில் பெரும்பாலும் முதற்போட்டியில் விளையாடிய அதே அணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளபோதும் கடந்த போட்டியில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த இரவிச்சந்திரன் அஷ்வினுக்கு பதிலாக பூரண உடற்றகுதியை மீண்டும் பெற்றுள்ள இஷாந் ஷர்மா களமிறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் இந்திய அணி-ஷீகர் தவான், ரோஹித் ஷர்மா, விராத் கோலி, அஜிங்கியா ரகானே, மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் டோணி (தலைவர்), இரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந் ஷர்மா, பிரயந்தர் சிறான்
மறுகணம், தனது மனைவி இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கவுள்ள நிலையில், டேவிட் வோணர் விடுமுறையில் சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக அணியில் ஷோர்ன் மார்ஷ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, நாளைய போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள மிட்செல் மார்ஷுக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்ஸனும் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி- ஆரோன் பின்ஞ், ஷோர்ன் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), ஜோர்ஜ் பெய்லி, கிளென் மக்ஸ்வெல், மத்தியூ வேட், ஜேம்ஸ் போக்நர், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்கொட் போலாண்ட், ஜோஷ் ஹேஸில்வூட், ஜோயல் பரிஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .