2025 ஜூலை 31, வியாழக்கிழமை

நான்காவது டெஸ்டில் இந்தியாவின் ஆகாஷ் டீப்பும் இல்லை

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 21 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் அர்ஷ்டீப் சிங்கைத் தொடர்ந்து ஆகாஷ் டீப்பும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கெதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்ஜை சேர்க்கத் தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அர்ஷ்டீப்புக்கு கையில் காயமேற்பட்டுள்ள நிலையில் டீப்புக்கு அடிவயிற்றுப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை முழங்கால் காயமொன்று ஏற்பட்டதையடுத்து எஞ்சியுள்ள இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .