2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நான்காவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 06 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரில், சிட்னியில் நேற்று ஆரம்பித்த குறித்த போட்டியின் நேற்றைய நான்காம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா மூலம் இனிங்ஸைக் கட்டியெழுப்பியது.

இந்நிலையில், 67 ஓட்டங்களுடன் ப்ரோட்டிடம் ஸ்மித் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த கமரோன் கிறீனும் உடனேயே ப்ரோட்டிடம் வீழ்ந்திருந்தார். பின்னர் வந்த அலெக்ஸ் காரியும் சிறிது நேரத்திலேயே அணித்தலைவர் ஜோ றூட்டிடம் வீழ்ந்திருந்தார்.

அந்தவகையில், நிலைத்து நின்ற கவாஜா, முதலில் அணித்தலைவர் பற் கமின்ஸின் துணையுடனும், அவர் 24 ஓட்டங்களுடன் ப்ரோட்டிடம் வீழ்ந்த நிலையில், பின்னர் மிற்செல் ஸ்டார்க்கின் துணையுடனும் ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியாக 137 ஓட்டங்களுடன் ப்ரோட்டிடம் கவாஜா வீழ்ந்த நிலையில், தமது முதலாவது இனிங்ஸை 8 விக்கெட்டுகளை இழந்து 416 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா இடைநிறுத்தியது. ஸ்டார்க் 34, நேதன் லையன் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, இன்றைய இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 416/8 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 137, ஸ்டீவ் ஸ்மித் 67, மார்க்கஸ் ஹரிஸ் 38, மிற்செல் ஸ்டார்க் ஆ.இ 34, டேவிட் வோணர் 30, மர்னுஸ் லபுஷைன் 28, பற் கமின்ஸ் 24, நேதன் லையன் ஆ.இ 16 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 5/101, ஜோ றூட் 1/36, ஜேம்ஸ் அன்டர்சன் 1/54, மார்க் வூட் 1/76)

இங்கிலாந்து: 13/0


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .