2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

நாயரின் இரட்டைச் சதத்தையடுத்து தடுமாறும் இந்தியப் பந்துவீச்சாளர்கள்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 01 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான போட்டியில் இந்திய ஏ அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறுகின்றனர்.

கன்டர்பெரியில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான குறித்த முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, கருண் நாயரின் 204, துருவ் ஜுரேலின் 94, சஃப்ராஸ் கானின் 92, ஹர்ஷ் டுபேயின் 32 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 557 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜொஷ் ஹல் 3, ஸமன் அக்தர் 3, எடி ஜக் 2, அஜீட் சிங் டேல் 1, றெஹான் அஹ்மட் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. டொம் ஹெய்ன்ஸ் 103 ஓட்டங்களுடனும், மக்ஸ் ஹொல்டன் 64 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக எமிலோ கே 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அன்ஷுல் கம்போஜ், ஹர்ஷ் டுபே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .