Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், உத்தியோகபூர்வமாக நாளை (09) ஆரம்பிக்கின்றன. இலங்கை போன்ற காலநிலை கொண்ட நாடுகளில், கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றி, பெருமளவுக்குக் கருத்திலெடுக்கப்படுவதில்லை. ஆனால் இம்முறை இப்போட்டிகள், அதிக கவனம் செலுத்தப்படும் போட்டிகளாக மாறியிருக்கின்றன.
இப்போட்டிகள், தென்கொரியாவின் பியோங்சாங் நகரில், நாளை ஆரம்பித்து, இம்மாதம் 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இது, தென்கொரியாவில் இடம்பெறுவதும், இப்போட்டிகளில் வடகொரியா பங்குபற்றச் சம்மதித்தமையும் தான், வழக்கத்தை விட அதிகமான கவனத்தை, இப்போட்டிகள் ஈர்ப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
7 விளையாட்டுகளில் 102 வகையான போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ள. இதில், 92 நாடுகளைச் சேர்ந்த 2,952 விளையாட்டு வீரர்கள் பங்குகொள்கின்றனர். ஆரம்ப நிகழ்வு, இலங்கை நேரப்படி நாளை மாலை 4.30க்கு இடம்பெறவுள்ளது.
இதில் குறிப்பாக, தென்கொரியாவும் வடகொரியாவும், ஒரே கொடியின் கீழ், ஆரம்ப நிகழ்வில் அணிவகுத்துச் செல்லவுள்ளமை, அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. அதேபோன்று ஐஸ் ஹொக்கியில், பெண்கள் பிரிவில், இரு நாடுகளும் இணைந்து, ஒரே அணியாக விளையாடவுள்ளமையும், இங்கு முக்கியமானதாகக் காணப்படுகிறது.
பனிச்சறுக்கல், ஐஸ் ஹொக்கி போன்ற பிரபலமான விளையாட்டுகள், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் கவரும் விளையாட்டுகளாகும்.
அதேபோல், ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தடை நீடிக்கும் நிலையில், ஒலிம்பிக் கொடியின் கீழ், அவர்கள் பங்குபற்றவுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago