2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நியூசிலாந்துக்கு சவாலளிக்குமா சிம்பாப்வே?

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் வியாழக்கிழமை (07) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்ற நிலையில், அவ்வணியை சவாலுக்குட்படுத்துவதற்கே பாரியளவு முன்னேறத்தைக் காண்பிக்கவேண்டியுள்ளது.

குறிப்பாக அணித்தலைவர் கிறேய்க் எர்வின், சிகண்டர் ராசா, பிரயன் பென்னிட், பென் கர்ரன் உள்ளிட்டவர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பிரெண்டன் டெய்லர் மூன்றரை ஆண்டுகள் தடைக்குப் பின்னர் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில் அணியில் அவர் நிக் வெல்ஷை பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபக்கமாக நியூசிலாந்து அணியின் தலைவர் டொம் லேதம் முதலாவது போட்டியில் விளையாடியிருக்காத நிலையில் இப்போட்டியிலும் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகின்றது.

முதலாவது போட்டியில் விளையாடிய நாதன் ஸ்மித், வில் ஓ ருர்க் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களை மத்தியூ பிஷர், ஜேக்கப் டஃபி பிரதியிடுவரென எதிர்பார்க்கப்படுவதோடு, மிஷெல் பிறேஸ்வெல்லை ஸகாரி போக்ஸ் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .