2024 மே 11, சனிக்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்துமா இங்கிலாந்து?

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 01 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, லோர்ட்ஸில் இலங்கை நேரப்படி நாளை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் நியூசிலாந்தும், மூன்றாமிடத்தில் இங்கிலாந்தும் காணப்படுகின்ற நிலையில், தொடரை வெல்லும் பட்சத்தில் முதலாமிடத்துக்கு நியூசிலாந்து முன்னேற முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கமாக தொடரை 2-0 என இங்கிலாந்து வென்றால் இரண்டாமிடத்துக்கு முன்னேற முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, இந்தியாவுடனான சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பதாக இத்தொடர் நடைபெறுவதானது நியூசிலாந்துக்கு சாதகமாக அமைகின்ற நிலையில் இத்தொடரானது முக்கியம் பெறுகிறது.

காயங்களால் ஜொஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸையும், இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்ற ஜொஸ் பட்லர், ஜொனி பெயார்ஸ்டோ, சாம் கர்ரன் உள்ளிட்டோரை இங்கிலாந்து இத்தொடரில் தவறவிடுகின்ற நிலையில் அணித்தலைவர் ஜோ றூட், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோரில் பெரும் சுமை காணப்படுகின்றது.

மறுபக்கமாக ட்ரெண்ட் போல்டை நியூசிலாந்து தவறவிடுகின்றபோதும் டிம் செளதி, நீல் வக்னரென பலமாகவே பந்துவீச்சு வரிசை காணப்படுவதுடன், முதன்முறையாக இங்கிலாந்து மண்ணில் விளையாடவுள்ள கைல் ஜேமிஸன் மீதும் அவதானம் காணப்படுகின்றது. துடுப்பாட்டப்பக்கம், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், டொம் லேதம், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் பிரதானமானவர்களாகக் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .