Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

வங்க தேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தாக்கம் வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் எதிரொலித்தது. இதனால் ஆட்டம் 3 நிமிடம் தடைபட்டது. அனைத்து வீரர்களுகளும் தரையில் அமர்ந்து கொண்டனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
அயர்லாந்து அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 476 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய அயர்லாந்து அணி 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசம் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago