Editorial / 2026 மார்ச் 24 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஆலோசனையின் பேரில், நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் மத்திய மாகாண கிரிக்கெட் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தெரிவுப் போட்டிகள் இன்று (24) நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றன.
எதிர்காலத்தில் தேசிய கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கான திறமையான வீரர்களைக் கண்டறியும் நோக்கில் இந்த ஆரம்பகட்டத் தெரிவுகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்தத் தெரிவுப் போட்டிகளில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 280 வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 13, 15, 17, 19 மற்றும் 25 வயதிற்குட்பட்டோர் என ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வேகப்பந்து வீச்சாளர் தெரிவுகள் இடம்பெற்றன.
வீரர்களுக்கான தெரிவுகளுக்கு மேலதிகமாக, தகுதியான கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகளும் இதன்போது நடைபெற்றன. இன்றைய போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மாவட்ட ரீதியில் விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அங்கிருந்து மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள், எதிர்காலத்தில் தேசிய மட்டத்திலான அணிகளுக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
இந்தத் தெரிவுப் போட்டிகளின் முதலாம் நாள் நிகழ்வுகள் திங்கட்கிழமை (23) அன்று நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago