Mithuna / 2023 டிசெம்பர் 13 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண்டின் உலகத் தடகளவீரராக நெடுந்தூர ஓட்ட வீராங்கனை பெய்த் கிப்யெகொன், குறுந்தூர ஓட்ட வீரர் நோவா லைல்ஸ், கோலூன்றிப் பாய்தல் வீரரான அர்மன்ட் மொன்டோ டுப்லாண்டிஸ், மரதனோட்ட வீராங்கனை டிஜிஸ்ட் அசீஃபா, மரதனோட்ட வீரர் கெல்வின் கிப்டும், முப்பாய்தல் வீராங்கனை யுலிமார் றோஜாஸ் ஆகியோர் நேற்று முன்தினம் பெயரிடப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு விருதுகளானது தடம், களம், அரங்க்குக்கு வெளியாலென பிரிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் அனைவரும் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
உலக சம்பியன்ஷிப்பில் 1,500 மீற்றர் மற்றும் 5,000 மீற்றர் ஓட்டங்களை கென்யாவின் கிப்யெகொன் வென்றிருந்தார்.
இதேவேளை உலக சம்பியன்ஷிப்பில் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டங்களில் வென்றிருந்த ஐக்கிய அமெரிக்காவின் நைல்ஸ், 4x100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கம் வென்ற ஐக்கிய அமெரிக்க அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் சுவீடனின் டுப்லான்டிஸும், வெனிசுவேலாவின் றோஜாஸும் உலக சம்பியன்ஷிப்பில் வென்ற நிலையில், எதியோப்பியாவின் அசீஃபா பேர்லின் மரதனிலும், கிப்டும் லண்டன் மற்றும் சிக்காக்கோ மரதனில் வென்றிருந்தனர்.
25 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
50 minute ago