Shanmugan Murugavel / 2016 ஜூன் 05 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான குழாமில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மட் ஆமிர் இடம்பிடித்துள்ளார்.
ஸ்பொட் பிக்ஸிங் காரணமாக ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த ஆமிர், இவ்வாண்டின் ஆரம்பத்தில், பாகிஸ்தான் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட குழாமில் இடம்பெற்றிருந்தபோதும், டெஸ்ட் குழாமில் இணையும் முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.
மேற்குறிப்பிட்ட தொடருக்காக எதிர்வரும் 18ஆம் திகதி, இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் அணி பயணமாகவுள்ள நிலையில், இவ்வாரம், ஆமிருக்கு விசா கிடைக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்புகையில், ஆமிரின் விண்ணப்பத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் ஆதரவளித்துள்ளது.
எவ்வாறெனினும் 2010ஆம் ஆண்டு லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபட்டமை காரணமாக, மொஹம்மட் ஆசிஃப், சல்மான் பட்டோடு சேர்த்து ஆமிருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஆமிருக்கு விசா வழங்கப்படுமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்ச் மாதம் முடிவடைந்த ஊக்க மருந்துத் தடைக்கு பின்னர் யசீர் ஷா முதற்தடவையாக சர்வதேச தொடரொன்றுக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த மொஹம்மட் ஹஃபீஸ், குணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு குழாமில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், முழங்கால் காயம் காரணமாக ஜூனைட் கான் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
குழாம்: மொஹம்மட் ஹஃபீஸ், ஷன் மசூட், சமி அஸ்லாம், மிஸ்பாஹ்-உல்-ஹக் (தலைவர்), யூனிஸ் கான், அஸார் அலி, அசாட் ஷஃபிக், இஃப்திகார் அஹ்மெட், சர்ஃபாஸ் அஹ்மெட் (விக்கெட் காப்பாளர்), மொஹம்மட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), சுல்பிகார் பாபர், யசீர் ஷா, வஹாப் ரியாஸ், மொஹம்மட் ஆமிர், ரஹாட் அலி, இம்ரான் கான், சொஹைல் கான்
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago