2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை வென்றது நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், நியூசிலாந்து அணி 70 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

வெலிங்டனில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது. 6 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, பின்வரிசை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தால், மிகச்சிறப்பான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஹென்றி நிக்கலஸ் 82 (111), மற் ஹென்றி ஆட்டமிழக்காமல் 48 (30), மிற்சல் சான்ட்னெர் 48 (63), மிற்சல் மக்லநகன் 31 (30) ஓட்டங்களைப் பெற்றனர். இதில் மக்லநகன், துடுப்பெடுத்தாடும் போது, பந்து கண்ணைத் தாக்கியதால், மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

பந்துவீச்சில் மொஹமட் ஆமிர், அன்வர் அலி இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் இர்பான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

281 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 46 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது, துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் 62 (76), மொஹமட் ஹபீஸ் 42 (56), சப்ராஸ் அஹமட் 30 (29) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 4, கிரான்ட் எலியட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, ஹென்றி நிக்கலஸ் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .