2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

போட்டி அவுஸ்திரேலியாவுக்கு: தொடர் இந்தியாவுக்கு

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 31 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடி வருகின்ற நிலையில், சிட்னியில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவி மிதாலி ராஜ், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என தெரிவித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்க்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, எலைஸ் பெரி, 3, ஆறு ஓட்டங்கள், 4, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெத் மூனி 34 பந்துகளில் 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 34 ஓட்டங்களையும் அணித்தலைவி மெக் லன்னிங் 25 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம், 2, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ராஜேஸ்வரி கயாகவாட் 2 விக்கெட்டுகளையும் டீப்தி ஷர்மா, ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே இழந்து 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, வேலாஸ்வாமி வனிதா, ஒரு ஆறு ஓட்டம், 3, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 25 பந்துகளில் 28 ஓட்டங்களையும் ஹர்மன்பிரீட் கௌர் 2, ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 17 பந்துகளில் 24 ஓட்டங்களையும் வேதா கிருஷ்ணமூர்த்தி, 21 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டம் ஒரு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 21 ஓட்டங்களையும் பெற்றார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கலக்கிய எலைஸ் பெரி, 4 விக்கெட்டுகளையும் றெனி பரேல் 2 விக்கெட்டுகளையும் ஜெஸ் ஜோனாசென், கிறேஸ் ஹரிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகியாக எலைஸ் பெரியும் தொடரின் நாயகியாக ஜூலான் கோஸ்வாமியும் தெரிவாகினர். ஏற்கெனவே முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை, 2-1க்கு என்ற ரீதியில் கைப்பற்றியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .