Shanmugan Murugavel / 2016 ஜனவரி 19 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) எதிர்வரும் பருவகாலத்தில் புதிதாகப் பங்கேற்கவுள்ள, பூனேயைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரைஸிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் தலைவரான மகேந்திரசிங் டோணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு தடவைகள், ஐ.பி.எல் பட்டத்தை பெற்றுக்கொடுத்த டோணி, ஒரு பருவகாலத்துக்கு மட்டுமே பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற வீரர்கள் தெரிவில், டோணியை முதலாவதாக தெரிவு செய்திருந்த பூனே அணி, பின்னர் அஜிங்கியா ரகானே, இரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்டீவன் ஸ்மித், பப் டூ பிலிசிஸ் ஆகிய நான்கு வீரர்களைத் தெரிவு செய்திருந்தது.
நியூ ரைஸிங்கால் நிர்வகிக்கப்படும் ரைஸிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ், எதிர்வரும் ஆறாம் திகதி இடம்பெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் 27 கோடி இந்திய ரூபாயை செலவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .