2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பின்வாங்குகின்றனர் ரஷ்யர்கள்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 29 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் நிறுவனரீதியான ஊக்கமருந்துப் பாவனை இடம்பெறுவதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு, ரஷ்யாவின் ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான முகவராண்மையின் அதிகாரிகள் சிலர், நேர்காணல் வழங்கியிருந்த நிலையில், தற்போது அதிலிருந்து ரஷ்யா பின்வாங்கியுள்ளது.

அம்முகவராண்மையின் பதில் பணிப்பாளர் நாயகம் வழங்கிய கருத்துகள், திரிவுபடுத்தப்பட்டுள்ளதாக, அம்முகவராண்மை அறிவித்துள்ளது. அவர் தெரிவித்த கருத்தின் ஒரு பகுதியை மாத்திரம் பிரசுரித்து, நாட்டில் நிறுவனரீதியான ஊக்கமருந்துப் பாவனை நிலவுகிறது போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்முகவராண்மை குறிப்பிடுகிறது.

ஆனால், தாங்கள் பிரசுரித்த செய்தியில் தவறுகள் கிடையாது எனத் தெரிவித்துள்ள நியூயோர்க் டைம்ஸ், அதிலுள்ள அனைத்துக் கருத்துகளும், அப்படியே உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .