Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகாத் தொடரின், கடந்த சனிக்கிழமை (20) இடம்பெற்ற போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது.
பார்சிலோனாவுக்கும் லாஸ் பல்மாஸ் அணிக்குமிடையே இடம்பெற்ற போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியின் ஆறாவது நிமிடத்தில், ஜோர்டி அல்பாவிடம் பந்தைப் பெற்ற லூயிஸ் சுவரேஸ், இந்தப் பருவகாலத்தில் 25ஆவது லீக் கோலைப் பெற்று, ஆரம்பத்திலேயே தனது அணிக்கு முன்னிலை வழங்கியிருந்தார். எனினும் அடுத்த நான்காவது நிமிடத்தில், லாஸ் பல்மாஸ் அணியின் ஜொனதன் வியர்ராசின் புத்திசாலித்தனமான ‘ப்ரீ கிக்’ மூலம் வில்லியன் ஜோஸ் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமமானது. எனினும் போட்டியின் 39ஆவது நிமிடத்தில், லயனல் மெஸ்ஸி, கோல்கம்பத்துக்கு அருகே இருந்து அடுத்த பந்து திரும்பியநிலையில், அதை பார்சிலோனாவின் நேமர், தனது அணிக்காக, வெற்றிக் கோலாக்கியிருந்தார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம், லா லிகாத் தொடரின் புள்ளிகள் தரவரிசையில், 63 புள்ளிகளுடன், புள்ளிகள் தரவரிசையில் அடுத்த இடத்திலுள்ள அத்லெட்டிகோ மட்ரிட், றியல் மட்ரிட்டை விட குறிப்பிடத்தக்களவான புள்ளிகள் வித்தியாசத்தை கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .