2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பார்சிலோனாவில் இணைந்தனர் மெஸ்ஸி, சுவாரஸ், பிகேயின் மகன்கள்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2035ஆம் ஆண்டு பார்சிலோனா, இன்னொரு தடவை வருடத்தின் மூன்று பட்டங்களையும் வென்றிருக்கலாம். தியாகோ மெஸ்ஸியும் பெஞ்சமின் சுவாரஸும் 100க்கு மேற்பட்ட கோல்களைப் பெற்றிருக்கலாம். தலைவர் மிலான் பிகே, தனது தந்தையின் நிழலிருந்து வெளியே வந்து, பின்களத்தில், சிறப்பான பருவகாலத்தை கொண்டிருக்கலாம்.

மேற்கூறப்பட்ட தகவல்கள் உண்மையாவதற்கு நீண்ட தூரம் உண்டு. எனினும், அதற்கான முதற்படி கடந்த திங்கட்கிழமை (19) எடுத்து வைக்கப்பட்டுள்ளது. பார்சிலோனா பாடசாலையில், லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ், ஜெராட் பிகேயினுடைய மகன்கள், தமது முதலாவது அமர்வினைக் கொண்டிருந்தனர்.

மூன்று வயதுக்கும் ஐந்து வயதுக்கும் உட்பட்ட 25 பேருக்கும் மேற்படாத குழுவில் இடம்பெற்றிருந்தனர். தியாகோ, மிலானுக்கு ஏற்கெனவே மூன்று வயதை அடைந்ததுடன், இம்மாத இறுதியில் பெஞ்சமின் மூன்று வயதை அடைகிறார். திங்கட்கிழமைகள், புதன்கிழமைகளில் இவர்கள் அமர்வைக் கொண்டிருக்கின்றனர்.  

மேற்படி அமர்வுகளின் மூலம் ஆரம்ப வயதிலேயே அவர்களுக்கு பார்சிலோனா மரபணுவை புகுத்துவது அல்லாமல், அவர்களுக்கு கால்பந்தாட்டத்தை பழக்கப்படுத்தப்படவுள்ளது.

தியாகோ இன்னும் கால்பந்தாட்ட வீரர் ஆகவில்லை என இம்மாத ஆரம்பத்தில் மெஸ்ஸி தெரிவித்த நிலையில், மிலான் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக மிலானின் தாயாரான ஷகிரா கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .