2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

பார்சிலோனாவிலேயே நிறைவு செய்வேன்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 5ஆவது தங்கப்பந்து விருதை வென்ற லியனொல் மெஸ்ஸி, அவரது கழகமான பார்சிலோனாவை விட்டு விலகுவார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது கால்பந்தாட்ட வாழ்வை, பார்சிலோனாவிலேயே நிறைவு செய்யவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது விருதை வெற்றிகொண்ட பின்னர் கருத்துத் தெரிவித்த லியனல் மெஸ்ஸி, 'பார்சிலோனாவை விட்டு வெளியேற விரும்பவில்லை என்பதை நான் எப்போதும் தெரிவித்து வந்திருக்கிறேன். 'எனது பதில் ஒரே பதிலே. எனது திட்டமென்னவெனில், எனது கால்பந்தாட்ட வாழ்வை எனது இடத்திலேயே நிறைவு செய்ய விரும்புகிறேன், எனது இடம், பார்சிலோனா ஆகும்" என்றார்.

பார்சிலோனாவை விட்டு மெஸ்ஸி வெளியேறுவார் என வதந்திகள் வெளியாகியிருந்த நிலையில், மன்செஸ்டர் சிற்றி, செல்சி போன்ற அணிகள், அவரை ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றன என்ற கருத்துக் காணப்பட்டது. மெஸ்ஸியின் இந்தப் பதில், அவ்வணிகளுக்குப் பேரிடியாக அமைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .