2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

போர்த்துக்கல், ஜெர்மனி, நெதர்லாந்து வெற்றி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 30 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் சிநேகபூர்வ ஆட்டங்கள் இடம்பெற்று வருகையில், கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற போட்டிகளில், போர்த்துக்கல், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, பொஸ்னியா-ஹெர்ஸிகோவினா, துருக்கி, அல்பானியா, நோர்வே, லத்தீவியா, ஐஸ்லாந்து, பல்கேரியா, சேர்பியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றதோடு, அயர்லாந்துக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சுவீடன், செக் குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியும் ஜோர்ஜியா, கஜகஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.

போர்த்துக்கல், பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது. போர்த்துக்கல் சார்பாக, போட்டியின் 20ஆவது நிமிடத்தில் நானியும் 40ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கோல்களைப் பெற்றனர்.

ஜெர்மனி, இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. ஜெர்மனி சார்பாக, போட்டியின் 24ஆவது, 45ஆவது, 59ஆவது, 75ஆவது நிமிடங்களில் டொனி குரூஸ், மரியோ கோட்ஸே, ஜொனஸ் ஹெக்டர், மெசூட் ஒஸில் ஆகியோர் கோல்களைப் பெற்றனர்.

நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பாக பெறப்பட்ட கோலை ஜேமி வர்டி பெற்றிருந்தார்.

இதேவேளை, ஏனைய போட்டிகளில், பிரான்ஸ், 4-2 என்ற கோல்கணக்கில்  ரஷ்யாவைத் தோற்கடித்ததுடன் ஸ்கொட்லாந்து, 1-0 என்ற கோல்கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்ததுடன் பொஸ்னியா-ஹெர்ஸிகோவினா, 2-0 என்ற கோல்கணக்கில் சுவிற்ஸர்லாந்தை தோற்கடித்ததுடன் துருக்கி, 2-1 என்ற கோல்கணக்கில் ஒஸ்திரியாவை தோற்கடித்ததுடன் அல்பானியா, 2-0 என்ற கோல்கணக்கில் லக்ஸம்பேர்க்கை தோற்கடித்ததுடன் நோர்வே, 2-0 என்ற கோல்கணக்கில் பின்லாந்தை தோற்கடித்ததுடன் லத்தீவியா, 5-0 என்ற கோல்கணக்கில் ஜில்பிரால்ட்டரை தோற்கடித்ததுடன் ஐஸ்லாந்து, 3-2 என்ற கோல்கணக்கில் கிறீஸை தோற்கடித்ததுடன் பல்கேரியா, 2-0 என்ற கோல்கணக்கில் மசிடோனியாவை தோற்கடித்ததுடன் சேர்பியா, 1-0 என்ற கோல்கணக்கில் எஸ்டோனியாவை தோற்கடித்தது.

அயர்லாந்துக் குடியரசு, ஸ்லோவாக்கியா அணிகளுக்கிடையிலான போட்டி 2-2 என்ற கோல்கணக்கிலும் சுவீடன், செக் குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல்கணக்கிலும் ஜோர்ஜியா, கஜகஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல்கணக்கிலும் மொன்ரநீக்ரோ, பெலாரஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் எந்தவொரு கோலும் பெறப்படாது சமநிலையில் முடிவடைந்திருந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .