Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறீமியர் லீக்கின் கடந்த சனிக்கிழமை (20) இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, செல்சி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், பேர்ண்லி, ஹள் சிற்றி, எவெர்ற்றன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதோடு, ஆர்சனல், லெய்செஸ்டர் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
மன்செஸ்டர் சிற்றி, ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றிருந்தது. சிற்றி சார்பாக சேர்ஜியோ அக்ரோ, நொலிட்டோ ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்தனர்.
செல்சி, வட்ஃபோர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் செல்சி வெற்றி பெற்றிருந்தது. செல்சி சார்பாக மிச்சி பச்சுவை, டியகோ கோஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
லெய்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்ததோடு, பிறீமியர் லீக்குக்கு முன்னேறிய பேர்ண்லி அணியிடம் 2-0 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் தோல்வியடைந்ததோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 1-0 என்ற கோல்கணக்கில் கிறிஸ்டல் பலஸை தோற்கடித்ததோடு, பிறீமியர் லீக்குக்கு முன்னேறிய ஹள் சிற்றி, 2-0 என்ற கோல்கணக்கில் சுவான்சீயைத் தோற்கடித்து தொடர்ச்சியாக தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றதுடன், எவெர்ற்றன், 2-1 என்ற கோல்கணக்கில் வெஸ்ட் புரோமைத் தோற்கடித்திருந்தது.
27 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
52 minute ago