Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் வெளிச்செல்லும் தலைவர் செப் பிளட்டர், அதன் உப தலைவரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத்தின் தலைவருமான மைக்கல் பிளட்டினி ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தடைக்கெதிராக மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டில், அவர்களது குற்றம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை, குறைக்கப்பட்டுள்ளது.
மைக்கல் பிளட்டினிக்கு செப் பிளட்டர் வழங்கிய 1.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் கொடுப்பனவில், அவர்களிருவருமே குற்றம் இழைத்தார்கள் என, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மேன்முறையீட்டுக் குழு அறிவித்தது.
எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 8 ஆண்டுத் தடைக்குப் பதிலாக, 6 ஆண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் குற்றமெதனையும் செய்யவில்லை எனத் தொடர்ந்து வாதாடி வரும் பிளட்டரும் பிளட்டினினும், இந்த முடிவுக்கெதிராக விளையாட்டுக்கான தீர்ப்பாய நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வழங்கபப்ட்ட தீர்ப்பின் காரணமாக, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மேன்முறையீட்டுக் குழுவின் மீது மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக பிளட்டர் அறிவிக்க, குறித்த முடிவு, 'அவமானப்படுத்துவதும்; வெட்ககரமானதும் அரசியல் ரீதியான முடிவும்" என, பிளட்டினி தெரிவித்துள்ளார்.
7 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago