Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கும் புவேர்ட்டோ றிக்கோவுக்கும் இடையில் இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சிநேகபூர்வப் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
மும்பையில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலாவது கோலை புவேர்ட்டோ றிக்கோ பெற்றுக் கொண்டது. ஆனால், 18ஆவது நிமிடத்தில் தனது முதலாவது கோலைப் பெற்றுக்கொண்ட இந்திய அணி, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது. அந்தக் கோலை, நாராயன் தாஸ் பெற்றுக் கொடுத்தார்.
தொடர்ந்து, 26ஆவது நிமிடத்தில் சேத்ரி பெற்றுக் கொடுத்த கோல், 34ஆவது நிமிடத்தில் ஜேஜே லால்பெக்லுவா பெற்றுக் கொடுத்த கோல் ஆகியவற்றின் உதவியுடன், முதலாவது பாதி முடிவில், 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி முன்னிலை வகித்தது. தொடர்ந்து, இரண்டாவது பாதியில் மற்றொரு கோல் பெறப்பட்டு, 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இதற்கு முன்னர், 1955ஆம் ஆண்டிலேயே, மும்பையில், சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று இடம்பெற்றிருந்த நிலையில், 61 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற சர்வதேசப் போட்டியைக் காண, இரசிகர்களில் ஏராளமானோர் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago