Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல குத்துச்சண்டை வீரரான மனி பக்கியோவின் அனுசரணை ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக, உலகின் பிரபலமான விளையாட்டு அணிபொருட்களின் உற்பத்தியாளரான நைக்கி நிறுவனம் அறிவித்துள்ளது. சமபாலுறவாளர்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த மனி பக்கியோ, சமபாலுறவாளர்கள், மிருகங்களை விடக் கீழ்த்தரமானவர்கள் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னரும் கூட, சமபாலுறவாளர்கள் கொல்லப்பட வேண்டும் என்றவாறான கருத்துகளை அவர் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பக்கியோவுக்கான அனுசரணையை, நைக்கி நீக்கிக் கொள்ள வேண்டுமென அழுத்தங்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து, பக்கியோவின் அனுசரணையை நீக்குவதாக அறிவித்த நைக்கி, அவரது கருத்துகள், தவறானவையெனக் கருதுவதாகத் தெரிவித்ததோடு, அவருடன் உறவுகள் எவற்றையும் இனிக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
தனது கருத்துக்காக பக்கியோ மன்னிப்புக் கோரியுள்ள போதிலும், சமபாலுறவுக்கு இன்னமும் எதிர்ப்பாகவே உள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago