Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள உலக இருபதுக்கு-20 தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதினைந்து பேர் கொண்ட குழாமாகவே இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழாமில் அதிர்ச்சியளிக்கும்முகமாக விக்கெட்காப்பாளர் மொஹம்மட் மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இவர் மூன்றாவது விக்கெட்காப்பாளர் ஆவார்.முஷ்திபிகார் ரஹீம், நுருல் ஹஸன் ஆகியோரே குழாமிலுள்ள ஏனைய இரண்டு விக்கெட்காப்பாளர்கள் ஆவர். எனினும் விளையாடும் பதினொருவர் அணியில் நுருல் ஹஸனே விக்கெட்காப்பாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, சகலதுறை வீரர் நஸிர் ஹொஸைனும் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற சிம்பாப்வேக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் இவருக்குப் பதிலாக பங்கேற்ற சகலதுறை வீரர் ஷுவகட்டா ஹொம், அப்போட்டிகளில் சிறப்பாகச் செயற்படாத நிலையில், பங்காதேஷின் உலக இருபதுக்கு-20 குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
இதேவேளை, பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில் சிறப்பாகச் செயற்பட்ட ஆரம்பத்துடுப்பாட்டவீரர் இம்ரல் கைஸும் அறிவிக்கப்பட்டுள்ள மேற்படிக் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
குழாம்- மஷ்ரபி மோர்ட்டஸா (தலைவர்), ஷகிப் அல் ஹஸன், தமீம் இக்பால், மொஹம்மட் மிதுன், மஹ்முதுல்லா, முஷ்திபிகார் ரஹீம், சௌமியா சர்க்கார், சபீர் ரஹ்மான், நஸிர் ஹொஸைன், முஷ்டாபிசூர் ரஹ்மான், அல்-அமின் ஹொஸைன், டாஸ்கின் அஹ்மெட், அரபாத் சணி, அபு ஹைதர், நுருல் ஹஸன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .