2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இலங்கை

Shanmugan Murugavel   / 2022 மே 27 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், மிர்பூரில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 34 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை சிறிது நேரத்திலேயே முஷ்பிக்கூர் ரஹீமை 23 ஓட்டங்களுடன் கசுன் ராஜிதவிடம் இழந்தது.

பின்னர் லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹஸனின் இணைப்பாட்டத்தால் இனிங்ஸ் நகர்ந்தபோதும் 52 ஓட்டங்களுடன் அசித பெர்ண்ணாண்டோவிடம் லிட்டன் தாஸ் வீழ்ந்ததுடன், தொடர்ந்து ஷகிப் அல் ஹஸனும் 58 ஓட்டங்களுடன் அசித பெர்ணாண்டோவிடம் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து பின்வரிசை மொஷாடெக் ஹொஸைன், அசித பெர்ணாண்டோ(2)விடம் விழ பங்களாதேஷ் சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது இரண்டாவது இனிங்ஸில் 169 ஓட்டங்களையே பெற்றது. பந்துவீச்சில், அசித பெர்ணாண்டோ 6, கசுன் ராஜித 2, ரமேஷ் மென்டிஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் 29 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக அசித பெர்ணாண்டோவும், தொடரின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸும் தெரிவாகினர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 365/10 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 175, லிட்டன் தாஸ் 141 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 5/64, அசித பெர்ணாண்டோ 4/93)

இலங்கை: 506/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 145, தினேஷ் சந்திமால் 124, திமுத் கருணாரத்ன 80, தனஞ்சய டி சில்வா 58, ஒஷாட பெர்ணாண்டோ 57 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 5/96, எபொடொட் ஹொஸைன் 4/148)

பங்களாதேஷ்: 169/10 (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் 58, லிட்டன் தாஸ் 52 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 6/51, கசுன் ராஜித 2/40, ரமேஷ் மென்டிஸ் 1/20)

போட்டியின் நாயகன்: அசித பெர்ணாண்டோ

தொடரின் நாயகன்: அஞ்சலோ மத்தியூஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .