Editorial / 2018 ஜூன் 06 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், தேராதூனில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹஸன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 43 (48), முஷ்பிக்கூர் ரஹீம் 22 (18), அபு ஹைதர் ஆட்டமிழக்காமல் 21 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஷீட் 4, மொஹமட் நபி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், சமியுல்லா ஷென்வாரி 49 (41), மொஹமட் நபி ஆட்டமிழக்காமல் 31 (15), மொஹமட் ஷஷாட் 24 (18) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஷாடெக் ஹொஸைன் 2, அபு ஹைதர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ரஷீட் கான் தெரிவானார்.
அந்தவகையில், மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலாவது போட்டியிலும் வென்ற ஆப்கானிஸ்தான், 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி, தேராதூனில் நாளை இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago