Shanmugan Murugavel / 2024 ஜூன் 23 , மு.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அன்டிகுவாவில் சனிக்கிழமை (22) நடைபெற்ற பங்களாதேஷுடனான குழு ஒன்று சுப்பர் – 8 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் 23 (11), விராட் கோலியின் 37 (28), றிஷப் பண்டின் 36 (24), ஷிவம் டுபேயின் 34 (24), ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமிழக்காத 50 (27) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், தன்ஸின் ஹஸன் சகிப் 4-0-32-2, மகமதுல்லா 2-0-8-0, மஹெடி ஹஸன் 4-0-28-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், பாண்டியா (2), குல்தீப் யாதவ் (3), ஜஸ்பிரிட் பும்ரா (2), அர்ஷ்டீப் சிங்கிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களையே பெற்று 50 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஷன்டோ 40 (32), தன்ஸிட் ஹஸன் 29 (31), ரிஷாட் ஹொஸைன் 24 (10) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக பாண்டியா தெரிவானார்.
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago