Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜனவரி 25 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.
மிர்பூரில் இன்ற்று இடம்பெற்ற இறுதி குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷை சுருட்டுயெடுத்தே இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.
இப்போட்டியில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் 24 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 82 ஓட்டங்களுக்குள் பங்களாதேஷ் சுருண்டது. துடுப்பாட்டத்தில், முஷ்பிக்கூர் ரஹீம் 26 (56), சபீர் ரஹ்மான் 10 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால் 3, துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகன், திஸர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 83 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 11.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 39 (37), தனுஷ்க குணதிலக 35 (35) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக சுரங்க லக்மால் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago