2025 மே 21, புதன்கிழமை

பட்டியலில் சென்னை மீண்டும் முதலிடம்

Editorial   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று மாலை நடைபெற்ற கொல்கத்தா நைற் றைடெர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ராகுல் திரிபாதி 45(33) நித்திஷ் ராணா 37(27) ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்து வீச்சில் ஷர்துல் தாக்கூர் (2) ஜோஷ் ஹேசல்வூட் (2) விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு, 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பப் டு பிளெஸிஸ் 43(30), ருதுராஜ் கெய்க்வாட் 40(28), ரவீந்திர ஜடேஜா 22(8) ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்து வீச்சில்  சுனில் நரைன் (3) விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இப்போட்டியின் நாயகனாக ரவீந்திர ஜடேஜா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X