2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

பதுளை சரஸ்வதியில் கிரிக்கெட், கால்பந்தாட்ட போட்டிகள்

Editorial   / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், கல்லூரி  பழைய மாணவர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும்  5ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதுளையில்  நடைபெறவுள்ளன.

5, 6ஆம் திகதிகளில் பதுளை வின்சென்ட் டயஸ் விளையாட்டரங்கில் கிரிக்கெட் போட்டிகளும், உள்ளக விளையாட்டரங்கில் கால்பந்தாட்ட போட்டிகள் 7ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. 

இப்போட்டிகள் தொடர்ந்து 3 ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இப்போட்டிகள் மூலம் பெறப்படும் நிதியை  கல்லூரியின் கற்றல்-கற்பித்தல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X