Shanmugan Murugavel / 2016 ஜூன் 07 , மு.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, தனது இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் எதிர்கொண்ட அணிகளின் பலம் போதாது என, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இத்தொடரின் முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை அணி, துடுப்பெடுத்தாடுவதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தது. பயிற்சிப் போட்டிகளில் 8, ஆட்டமிழக்காமல் 16, 0, ஆட்டமிழக்காமல் 100 என ஓட்டங்களைப் பெற்ற கருணாரத்ன, டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியிருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அவர், பயிற்சிப் போட்டியில் பெற்ற சதம், மிகவும் திருப்தியாக இருந்திருக்கவில்லையெனவும், கடுமையான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, அந்தப் பயிற்சிகள் போதாது எனவும் அவர் தெரிவித்தார். பயிற்சிப் போட்டிகளில், இரண்டாம் நிலை அணிகளையே எதிர்கொண்டதாகத் தெரிவித்த அவர், இரண்டாவது பயிற்சிப் போட்டியில், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் விளையாடியதாகவும், மிகவும் வேகமாக வீசுபவர், 4 ஓவர்கள் மாத்திரமே வீசியதாகவும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .