2025 ஜூலை 19, சனிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மனுடன் றியல் மட்ரிட் மோதுகிறது

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், எந்த அணிகள் எதனுடன் மோதுவது என்பது குலுக்கலில் நேற்று  தீர்மானிக்கப்பட்டது.

அந்தவகையில், பிரெஞ்சு கழகமான பரிஸ் ஸா ஜெர்மனை, ஸ்பானிய கழகமான றியல் மட்ரிட் எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து கழகமான லிவர்பூல், போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவை எதிர்கொள்கிறது.

மேற்குறித்த இரண்டு பந்தியிலுள்ள அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி 14ஆம் திகதியும் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் மார்ச் ஆறாம் திகதியும் நடைபெறவுள்ளன

இங்கிலாந்து கழகமான மன்செஸ்டர் சிற்றி, சுவிற்ஸர்லாந்துக் கழகமான பேஸிலை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், இத்தாலிய கழகமான ஜுவென்டஸை எதிர்கொள்கிறது.

மேற்குறித்த இரண்டு பந்தியிலுள்ள அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் மார்ச் ஏழாம் திகதியும் நடைபெறவுள்ளன

இங்கிலாந்து கழகமான செல்சியை, ஸ்பானிய கழகமான பார்சிலோனா எதிர்கொள்கிறது.

ஜேர்மனிய கழகமான பெயார்ண் மியூனிச், துருக்கிக் கழகமான பெஸ்கிட்டாஸை எதிர்கொள்கிறது.

மேற்குறித்த இரண்டு பந்தியிலுள்ள அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி 20ஆம் திகதியும் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் மார்ச் 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளன

இங்கிலாந்து கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், ஸ்பானிய கழகமான செவில்லாவை எதிர்கொள்கிறது.

இத்தாலிய கழகமான றோமா, உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்க்கை எதிர்கொள்கிறது.

மேற்குறித்த இரண்டு பந்தியிலுள்ள அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி 21ஆம் திகதியும் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் மார்ச் 13ஆம் திகதியும் நடைபெறவுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X