Shanmugan Murugavel / 2021 ஜூன் 15 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரான கெய்லர் நவாஸ், அக்கழகத்தை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி டொன்னருமா பரிஸ் ஸா ஜெர்மைனில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே மேற்குறித்த விடயமும் எதிர்பார்க்கப்படுகிறது.
34 வயதான நவாஸைக் கைச்சாத்திட இன்னொரு சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், ஏ.சி மிலன் ஆகியன ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பரிஸ் ஸா ஜெர்மைனுடன் இன்னும் மூன்றாண்டு ஒப்பந்தத்தை நவாஸ் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
35 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
41 minute ago
52 minute ago