Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 04 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்ஜ்பஸ்டனில் ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிற பாகிஸ்தான் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 40 ஓட்டங்களே பின்தங்கியுள்ளது.
தற்போது களத்தில், யுனிஸ் கான் 21 ஓட்டங்களுடன் காணப்படுகையில், அஸார் அலி 139 ஓட்டங்களுடன், இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார். முன்னதாக, அஸார் அலியின், தற்கொலைக்கு சமமான ஓட்டமெடுப்பு முயற்சி ஒன்றினால், இங்கிலாந்து மண்ணில் சதம் பெற்ற இளம் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக மாறவிருந்த சமி அஸ்லாமின் கனவு 18 ஓட்டங்களால் பறிபோனது. அவர் 82 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
மொஹம்மட் ஹஃபீஸ் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அஸார் அலியும் சமி அஸ்லாமும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 181 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.
பந்துவீச்சில், ஜேம்ஸ் அன்டர்சன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதலாவது இனிங்ஸில் 297 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக கரி பலன்ஸ் 70, மொயின் அலி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் சொஹைல் கான் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago