2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பலமான நிலையில் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பலமான நிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முல்தானில் செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பாகிஸ்தான், மொஹமட் றிஸ்வாவை 41 ஓட்டங்களுடன் பிறைடன் கார்ஸிடம் ஆரம்பத்திலேயே இழந்தது.

பின்னர் சல்மான் அக்ஹா 31 ஓட்டங்களுடன் மத்தியூ பொட்ஸிடம் வீழ்ந்ததுடன், அடுத்து வந்த சஜிட் கானும் உடனேயே ஜேக் லீச்சிடம் வீழ்ந்தார். தொடர்ந்து 37 ஓட்டங்களுடன் கார்ஸிடம் ஆமிர் ஜமால் வீழ்ந்ததுடன், நோமன் அலி 32 ஓட்டங்களுடன் லீச்சிடம் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 366 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து குறிப்பிட்ட நேரத்தில் ஸக் குறோலியை அலியிடம் இழந்தது. பின்னர் ஒலி போப் 29 ஓட்டங்களுடன் கானிடம் வீழ்ந்தார். அதைத் தொடர்ந்து ஜோ றூட் 34 ஓட்டங்களுடன் கானிடம் வீழ்ந்ததோடு, சிறிது நேரத்திலேயே 114 ஓட்டங்களைப் பெற்ற பென் டக்கெட், ஹரி ப்றூக், அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் கானிடம் வீழ்ந்த நிலையில் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றுள்ளது.

தற்போது களத்தில் ஜேமி ஸ்மித் 12 ஓட்டங்களுடனும், கார்ஸ் இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .