Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தானில் விளையாடுவதற்கு இலங்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழைத்துள்ளது.
இலங்கைக்கெதிரான குறித்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வாண்டு ஒக்டோபரில் இடம்பெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தே. தமது நாட்டில் நடக்க வேண்டிய ஏறத்தாழ அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் இலங்கை கிரிக்கெட் அணி மீது 2009ஆம் ஆண்டு மார்ச்சில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலேயே பாகிஸ்தான் விளையாடியிருந்தது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட தொடரை பாகிஸ்தானில் நடாத்தும் திட்டத்தை நிராகரிக்காத இலங்கை கிரிக்கெட் சபை, பாதுகாப்பு மதிப்பீடொன்றைச் செய்ய இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் அண்மையில் முடிவடைந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த மாநாட்டில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடியதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும், இலங்கை கிரிக்கெட் சபையும் கலந்துரையாடலில் உள்ளபோதும் கடந்த வாரமே பாகிஸ்தானில் விளையாடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், லாகூர், கராச்சியில் பாதுகாப்புத் திட்டங்களை ஆராய்வதற்காக பாதுகாப்புப் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பிய பின்னரே பாகிஸ்தானில் விளையாடுவது குறித்து இலங்கை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago