Shanmugan Murugavel / 2025 ஜூலை 23 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்ற பங்களாதேஷ், மிர்ப்பூரில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் சல்மான் அக்ஹா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜாகிர் அலி 55 (48), மஹெடி ஹஸன் 33 (25) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சல்மான் மிர்ஸா 4-1-17-2, அஹ்மட் டனியால் 4-0-23-2, மொஹமட் நவாஸ் 3-0-19-1, பஹீம் அஷ்ரஃப் 3-0-20-1, சைம் அயூப் 1-0-3-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 134 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களையே பெற்று எட்டு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் பஹீம் அஷ்ரஃப் 51 (32) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஷொரிஃபுல் இஸ்லாம் 4-0-17-3, தன்ஸிம் ஹஸன் சகிப் 4-0-23-2, மஹெடி ஹஸன் 4-0-25-2, முஸ்தபிசூர் ரஹ்மான் 3.2-0-15-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஜாகிர் அலி தெரிவானார்.
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025