2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 34 ஆண்டுகளின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்த நிலையில், ட்ரினிடாட்டில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றதன் மூலமே 2-1 என்ற ரீதியில் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் மொஹமட் றிஸ்வான், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்ட இடைவெளிகளில் நசீம் ஷா (2), அப்ரார் அஹ்மட் (2), சைம் அயூப், மொஹமட் நவாஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் இறுதியில் அணித்தலைவர் ஷே ஹோப்பின் ஆட்டமிழக்காத 120 (94), ஜஸ்டின் கிரேவ்ஸின் ஆட்டமிழக்காத 43 (24) மற்றும் எவின் லூயிஸின் 37 (54), றொஸ்டன் சேஸின் 36 (29) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 295 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்திலிருந்தே ஜேடன் சியல்ஸ் (6), குடகேஷ் மோட்டி (2), சேஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 29.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களையே பெற்று 202 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஹோப்பும், தொடரின் நாயகனாக சியல்ஸும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .