Shanmugan Murugavel / 2024 நவம்பர் 13 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது பிறிஸ்பேணில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா இழந்துள்ளதுடன், அணித்தலைவர் மிற்செல் மார்ஷ், ட்ரெவிஸ் ஹெட், பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், கமரன் கிறீன் ஆகியோர் இல்லாத நிலையில் திடீரென அவ்வணி அழுத்தத்தில் காணப்படுகிறது.
குறிப்பாக ஹரிஸ் றாஃப், ஷகீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷாவை உள்ளடக்கிய பந்துவீச்சு வரிசையை எவ்வாறு அவுஸ்திரேலியா சமாளிக்கிறது என்பதிலேயே தொடரின் போக்கு தீர்மானிக்கப்படப் போகிறது.
அந்தவகையில் கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய சிரேஷ்ட வீரர்களிடமிருந்து போட்டியில் தாக்கம் செலுத்தக்கூடிய பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதுடன், டிம் டேவிட், ஜேக் பிறேஸர்-மக்குர்க், மத்தியூ ஷோர்ட், அணித்தலைவர் ஜொஷ் இங்லிஸ், ஆரோன் ஹார்டியின் துடுப்புகளிலிருந்தும் ஓட்டங்கள் அவசியமாகின்றது.
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago