Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, ட்ரினிடாட்டில் வெள்ளிக்கிழமை (08) இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் அணித்தலைவர் மொஹமட் றிஸ்வான் மற்றும் பாபர் அஸாம், நசீம் ஷா இடம்பெற்றிருப்பது பாகிஸ்தானுக்கு நிச்சயம் பலத்தை வழங்குகின்றது.
காயம் காரணமாக தொடரிலிருந்து பக்கர் ஸமன் விலகியுள்ள நிலையில் சைம் அயூப் வேகமான ஆரம்பத்தை அணிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.
மறுபக்கமாக மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷே ஹோப் மற்றும் றொஸ்டன் சேஸ், எவின் லூயிஸ், பிரெண்டன் கிங் உள்ளிட்டோரிடமிருந்து தொடர்ச்சியான பெரிய இனிங்ஸ்கள் கிடைத்தாலே ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 10ஆம் இடத்தில் காணப்படும் நிலையில் முன்னேறி நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற முடியும்.
16 minute ago
48 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
59 minute ago
1 hours ago