Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகம் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஷாஜாவில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், இப்ராஹிம் ஸட்ராவின் 65 (45), செதிகுல்லா அடல்லின் 64 (45) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பஹீம் அஷ்ரஃப் 4-0-27-4, சைம் அயூப் 4-0-18-1, ஷகீன் ஷா அஃப்ரிடி 4-0-27-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், பஸல்ஹக் பரூக்கி, மொஹமட் நபி, நூர் அஹ்மட், ரஷீட்டிடம் தலா 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களையே பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹரிஸ் றாஃப் ஆ.இ 34 (16), பக்கர் ஸமன் 25 (18), சல்மான் அக்ஹா 20 (15), சஹிப்ஸடா பர்ஹான் 18 (13) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக இப்ராஹிம் ஸட்ரான் தெரிவானார்.
5 minute ago
20 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
48 minute ago
1 hours ago