2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் ஒப்பந்தங்கள்: பாபர், றிஸ்வான் கீழிறக்கம்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2025-26 பருவகாலத்துக்கான ஒப்பந்தங்களில், கடந்த பருவகாலத்தில் ஏ பிரிவிலிருந்த பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான் பி பிரிவுக்கு கீழிறக்கப்பட்டுள்ளனர்.

பி பிரிவில் கடந்தாண்டிருந்த பாகிஸ்தானின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஷண் மசூட், டி பிரிவுக்கு கீழிறக்கப்பட்டுள்ளார்.

ஏ பிரிவில் எந்தவொரு வீரரும் இடம்பெறவில்லை.

இதேவேளை அப்ரார் அஹ்மட், சைம் அயூப், ஹரிஸ் றாஃப், சல்மான் அலி அக்ஹா, ஷடாப் கான் ஆகியோர் பிரிவுக்கு முன்னேறியுள்ளார்.

தவிர சுஃபியான் முக்கீம், ஹஸன் நவாஸ், மொஹமட் ஹரிஸுக்கு கடந்தாண்டு ஒப்பந்தமில்லாத நிலையில் இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்தாண்டு இருந்த ஆமிர் ஜமால், கம்ரான் குலாம், மிர் ஹம்ஸா, இர்ஃபான் கான் நியஸாய், உஸ்மான் கான் ஆகியோர் இம்முறை உள்ளடக்கப்படவில்லை.

பி: அப்ரார் அஹ்மட், பாபர் அஸாம், பக்கர் ஸமன், ஹரிஸ் றாஃப், ஹஸன் அலி, மொஹமட் றிஸ்வான், சைம் அயூப், சல்மான் அலி அக்ஹா, ஷடாப் கான், ஷகீன் ஷா அஃப்ரிடி.

சி: அப்துல்லாஹ் ஷஃபிக், பஹீம் அஷ்ரஃப், ஹஸன் நவாஸ், மொஹமட் ஹரிஸ், மொஹமட் நவாஸ், நசீம் ஷா, நொமன் அலி, சஹிப்ஸடா பர்ஹான், சஜிட் கான், செளட் ஷகீல்.

டி: அஹ்மட் டனியால், ஹுஸைன் தலாட், குராம் ஷஷாட், குஷ்டில் ஷா, மொஹமட் அப்பாஸ், மொஹமட் அப்பாஸ் அஃப்ரிடி, மொஹமட் வஸிம் ஜூனியர், சல்மான் மிர்ஸா, ஷண் மசூட், சுஃபியான் முக்கீம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .