2025 நவம்பர் 05, புதன்கிழமை

பாகிஸ்தான் களத்தடுப்பாளரின் எறியில் வெளியேறிய நடுவர்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கிண்ணத் தொடரில், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையேயான போட்டியில் பாகிஸ்தான் களத்தடுப்பாளரொருவர் எறிந்த பந்து நடுவரைத் தாக்கிய நிலையில் அவர் களத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

ஐ.அ. அமீரகத்தின் ஆறாவது ஓவரின்போது பந்துவீசிய சை அயூப்பை நோக்கி எறியப்பட்ட பந்தானது இலங்கை நடுவர் ருச்சிர பள்ளியாகுருகேயின் இடது காதுப் பகுதியில் தாக்கியது.

இந்நிலையில் பள்ளியாகுருகேக்கு தலைச்சுற்றல் இருக்கின்றதா என பாகிஸ்தானின் உடற்கூற்று நிபுணர் சோதித்ததுடன், முற்பாதுகாப்பு காரணமாக அவர் களத்தை விட்டு வெளியேறினார்.

அந்தவகையில் பள்ளியாகுருகேயை பங்களாதேஷின் மேலதிக நடுவர் கஸி சொஹெல் பிரதியிட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X