2025 நவம்பர் 05, புதன்கிழமை

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

Editorial   / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கிண்ண கிரிக்​கெட் தொடரில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் டாஸின்​போது இந்​திய அணியின் தலைவர் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் அணித்தலைவர் சல்​மான் அலி ஆகா​வுடன் கைகுலுக்​க​வில்​லை.

மேலும் டாஸின்​போது இரு அணி​களின் தலைவர்களுமே தங்​களின் விளை​யாடும் லெவன் பட்​டியலை பரஸ்​பரம் பகிரும் நிலை​யில், அந்த ஆட்​டத்​தில் சூர்​யகு​மார் யாத​வும், சல்​மான் அலி ஆகா இரு​வருமே மேட்ச் ரெஃப்​ரீ​யான ஆண்டி பைகி​ராஃப்​டிடமே பட்​டியலை பரி​மாறிக் கொண்​டனர். தொடர்ந்​து, ஆட்​டத்​தின் முடி​விலும் இந்​திய வீரர்​கள், பாகிஸ்​தான் வீரர்​களு​டன் கைகுலுக்​க​வில்​லை.

இந்த விவ​காரம் சர்ச்​சை​யாகி இருக்​கும் நிலை​யில், இதற்கு பொறுப்​பாக ஆட்ட நடு​வர் ஆண்டி பைகி​ராஃப்டை நீக்க வேண்​டும் என பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம், ஆசிய கிரிக்​கெட் கவுன்​சிலிடம் புகார் அளித்​தது. மேலும் இந்த விவ​காரத்தை ஐசிசி​யிட​மும் முறை​யிட்​டது. இந்​நிலை​யில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​தின் கோரிக்​கையை ஐசிசி நிராகரித்​துள்​ளது.

ஆண்டி பைஃகி​ராப்ட் நீக்​கப்பட மாட்​டார் எனவும், உங்​களது மனு நிராகரிக்​கப்​படு​கிறது எனவும் ஐசிசி-​யிடம் இருந்து பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு பதில் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது.

69 வயதான ஜிம்​பாப்​வேயை சேர்ந்த ஆண்டி பைஃகி​ராப்ட் ஆசிய கோப்பை தொடரில் இன்று பாகிஸ்​தான் - ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் மோதும் கடைசி லீக் ஆட்​டத்​தில் மேட்ச் ரெஃப்​ரீ​யாக செயல்பட உள்​ளார். ஐசிசி எலைட் பேனலின் போட்டி நடு​வர்​களில் சீனிய​ரான பைக்​ராஃப்ட், 695 சர்​வ​தேச ஆட்​டங்​களில் பணி​யாற்றி உள்​ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X