2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாக்., இந்திய அணிகள்: விளையாடும் ஆனா விளையாடாது

Editorial   / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.

‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது. 14ம் திகதி பாகிஸ்தானுடனும், 19ம் திகதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.

இதனிடையே கடந்த ஏப்​ரலில் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​தி​யத் தாக்​குதல் நடத்​தினர். இதற்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் மீது ‘ஆபரேஷன் சிந்​தூர்' என்ற பெயரில் இந்​தியா தாக்​குதலை நடத்​தி​யது. இதனிடையே பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யுடன் இருதரப்பு ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி மற்​றும் டெஸ்​டில் இந்​திய அணி பங்​கேற்​ப​தில்லை என்ற முடிவு கடந்த சில ஆண்​டு​களாக அமலில் உள்​ளது. பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பின்​னர் இது மேலும் தீவிர​மாகி​யுள்​ளது.

 

இதனால் ஆசி​யக் கோப்பை தொடரில் பாகிஸ்​தானுடன் இந்​திய அணி விளை​யாடுமா என்ற கேள்வி எழுந்​தது. இதற்கு தற்​போது மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகம் விளக்​கம் அளித்​துள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்சக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்​தியா - பாகிஸ்​தான் இடையே நேரடி​யாக எந்த கிரிக்​கெட் தொடரும் நடை​பெறாது.

அதேவேளை​யில் அடுத்த மாதம் நடை​பெறும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் இந்​தி​யா, பாகிஸ்​தானை எதிர்த்து விளை​யாடும். அந்​தப் போட்​டி​யில் இந்​தி​யா, பங்​கேற்​ப​தில் எந்​தப் பிரச்​சினை​யும் இருக்​காது. ஆனால் இந்​திய கிரிக்​கெட் அணி, பாகிஸ்​தானுக்கு சென்று எந்​த​விதப் போட்​டி​யிலும் பங்​கேற்​காது.

பாகிஸ்​தானில் நடை​பெறும் விளை​யாட்டு நிகழ்​வு​களில் பங்​கேற்​ப​தில்லை என்​பது இந்​தி​யா​வின் அணுகு​முறை​யாகும். பாகிஸ்​தானில் நடை​பெறும் எந்​த​வித​மான விளை​யாட்​டுப் போட்​டிகளி​லும் இந்​திய அணி​கள் பங்​கேற்​காது. இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் மோதும் இருதரப்பு கிரிக்​கெட் போட்​டிகள் அமெரிக்​கா​வில் நடத்​தத் திட்​ட​மிடப்​பட்​டாலும் அதற்கு அனு​மதி கிடை​யாது. ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் போட்டி என்​பது பல்​வேறு நாடு​கள் விளை​யாடும் தொடராகும். எனவே, இதில் இந்​திய கிரிக்​கெட் அணி பங்​கேற்​கப் போவதை நாங்​கள் தடுக்​கப் போவ​தில்​லை.

பல்​வேறு நாடு​கள் பங்​கேற்​கும் போட்​டி​யில் இந்​திய அணி பங்​கேற்​கலாம். அதே​நேரத்​தில் அந்​தப் போட்​டியை பாகிஸ்​தான் நடத்​தி​னால், அதில் இந்​தியா பங்​கேற்​பது தொடர்​பாக விவா​திக்​கப்​படும். இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​களுக்கு இடையே உள்ள பதற்​றம் தணிந்​தால் இரு நாடு​களுக்கு இடையி​லான போட்​டிகள் நடத்​தப்​படுமா என்​பது தெரிய​வில்​லை. தற்​போதைய நிலை​யில் அது சாத்​தி​யமில்​லை.

சர்​வ​தேச போட்​டிகளில் இந்​தி​யா​வைச் சேர்ந்த விளை​யாட்டு அணி​களும், தனிப்​பட்ட வீரர்​களும் பங்​கேற்​கலாம். அந்​தப் போட்​டிகளில் பாகிஸ்​தானைச் சேர்ந்த அணி​கள் அல்​லது வீரர்​களும் கலந்​து​கொண்டு விளையாடலாம். அதே​போல், இந்​தியா நடத்​தும் இது​ போன்ற பல்​வேறு நாட்டு அணி​கள் பங்​கேற்​கும் போட்​டிகளில் பாகிஸ்​தான் வீரர்​களும் அணி​களும்​ பங்​கேற்​க முடி​யும்​. இவ்​வாறு அந்​த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X